• May 19, 2024

நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

 நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூனியர் பாலையா , கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70

பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன்  ஜூனியர் இவரின் இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர். இவர் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிக அளவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி தொலைகாட்சி சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் நடித்து கவனிக்கப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘கும்கி’, ‘தனி ஒருவன்’, ‘புலி’ ஆகிய திரைபடங்களிலும் நடித்தார்.

.கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் இவர் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு ஜூனியர் பாலையா மரணம் அடைந்து விட்டார்.

இவரின் உடல் சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *