திருவாசகம்-திருப்பாடல்கள்

 திருவாசகம்-திருப்பாடல்கள்


திருவாசகம்

திருச்சதகம்

ஆனந்தாதீதம்

வித்தின்றி

விளையச்செய்வாய் 

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்? என்று பல கேள்விகள் இருக்கின்றன. 

ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான்

என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா? அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். 

எது ஒன்று தோன்றுவதற்கும், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். எனவே, இந்த உலகைப் படைத்தது இறைவன் என்று பக்திமான்கள் கூறுகிறார்கள்.  அவர்கள் அதோடு நின்று விடுகிறார்கள். எதை ஒன்றை தோற்றுவிப்பதற்கும் அதை உண்டாக்கிய ஒருவன் வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தது யார் என்ற பதில் கேள்வி எழும். 

இறைவனை யாரும் தோற்றுவிக்கவில்லை, அவன் தானே தோன்றி விட்டான் என்று கூறினால், இந்த

உலகமும் தானே தோன்றியது என்றும் கூறலாம். . சரி, இறைவன் தோற்றிவித்தான்  என்றால் எதில் இருந்து இந்த உலகத்தைப் படைத்தான் என்ற5 கேள்வி வரும்.

எதில் இருந்தோ என்றால் அதை யார் படைத்தார்கள் என்ற கேள்வி வரும்.  மணிவாசகர் கூறுகிறார்  “நீ உலகை இரண்டு விதத்தில் படைப்பாய்.

ஒன்று விதை இல்லாமல் விளைவு செய்வாய். இன்னொன்று இருக்கின்ற உலகை வைத்துக் கொண்டு மேலும் பலப் பல செய்வாய்.  அப்பேற்பட்ட நீ, என்னை உன் கோவில் வாசலில் பித்தனாக நிற்க வைத்தாய். உன் அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டாய்.

தாம் நட்ட மரம் விஷ மரம் என்று தெரிந்தாலும், நட்டவர்கள், அந்த மரத்தை அழிக்க மாட்டார்கள்.  நானும் அந்த மாதிரி ஒரு விஷ மரம்தான். என்னையும் அழித்து விடாதே ” என்று உருகுகிறார். 

பாடல்  

விச்ச தின்றியே விளைவு செய்குவாய்‌ 

விண்ணு மண்ணக முழுதும்‌ யாவையும்‌ 

வைச்சு வாங்குவாய்‌

வஞ்ச கப்பெரும்‌ 

புலைய னேனையுன்‌ கோவில்‌ வாயிலில்‌ 

பிச்சனாக்கினாய்‌

பெரிய வன்பருக்‌ 

குரியனாக்கினாய்‌ தாம்

வளார்த்ததோர்‌ 

ரச்சு மாமர மர்யி னுங்கொலார்‌ 

நானு. மங்ஙனே

யுடைய நாதனே. 

திருவாசகம் எட்டாம் திருமுறையில் 5 வதாக மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் அருளிச்செய்த 100 திருப்பாட்டுகளை

கொண்ட திருச்சதகம் என்ற தொகுதியில்  மாறிலாத மாக் கருணை வெள்ளமே என்று தொடங்கும்   10 வது ஆனந்தாதீதம் என்ற தலைப்பில் உள்ள  பாடல்களில் 6வது பாடல்.

பொருள் 

விச்ச தின்றியே =

விதை இன்றியே 

விளைவு செய்குவாய்‌  = விளைய வைப்பாய் 

விண்ணு மண்ணக முழுதும்‌ = விண்ணும், மண்ணும்

யாவையும்‌  = முழுவதும் 

வைச்சு வாங்குவாய்‌ = செய்வாய், பின் அவற்றை உன்னுள் அடங்கப் பண்ணுவாய் 

வஞ்ச கப் = வஞ்சக மனம் கொண்ட 

பெரும்‌  = பெரிய 

புலைய னேனை = கீழான என்னை 

யுன்‌ = உன் 

கோவில்‌ வாயிலில்‌  = கோவில் வாசலில் 

பிச்சனாக்கினாய்‌  = பித்தனாக்கினாய் 

பெரிய = மதிப்புள்ள 

வன்பருக்‌ குரிய = அன்பருக்கு உரியவன் 

னாக்கினாய்‌ = ஆக்கினாய் 

தாம் வ ளார்த்ததோர்‌  = தாம் வளர்த்த 

ரச்சு = நச்சு 

மாமர மர்யி னுங்கொலார்‌  = மா மரமாயினும் வைத்தவர்கள் அதை கொல்ல மாட்டார்கள் 

நானு. மங்ஙனே யுடைய நாதனே.  = நானும் அப்படித்ததான், எல்லாம் உடைய நாதனே 

என்ன ஒரு பாடல். எவ்வளவு பொருள் செறிவு. 

பிள்ளை பிறந்து வளர்ந்து விட்டான்.

சேராத இடம் சேர்ந்து, கெட்டுப் போய் விட்டான்.

ஊருக்கு அவன் கெட்டவனாக இருக்கலாம்.

ஆனால்,அவனைப் பெற்ற தாய்க்கு அவன் செல்லப் பிள்ளைத் தான். 

சிலர் மரம் வைத்து வளர்ப்பார்கள்.

வளர்ந்த பின்தான் தெரியும்,அந்த மரம் நச்சு கனிகளை கொடுக்கும் மரம் என்று.

அதற்காக அதை வெட்டி விட மாட்டார்கள்.

அது பாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவார்கள். 

அப்படி இருந்தது நம் பண்பாடு. 

இப்போது என்னடா என்றால், சாலை போடுகிறேன், வீடு கட்டுகிறேன், தொழிற்சாலை கட்டப் போகிறேன் என்று நூற்றுக் கணக்கில் மரங்களை வெட்டித் தள்ளுகிறார்கள்.

நச்சு மரத்தை கூட வெட்டாமல் வளர்த்த கருணை நிறைந்த பரம்பரை நம்முடையது.  இறைவன், ஒன்றும் இல்லாததில் இருந்து இந்த உலகை தோற்றுவித்தான்.  விதை இல்லாமல் செடி வளர்ப்பவன் என்கிறார் மணிவாசகர். அது எப்படி முடியும் என்றால், நமக்குத் தெரியாது.

மணிவாசகருக்கு தெரிந்து இருக்கிறது. 

இல்லை என்றால் வேலை மெனக்கெட்டு “விதை இல்லாமல் விளையச் செய்வாய்” என்று சொல்லுவாரா.

நம் அறிவுக்கு எட்டவில்லை. அவ்வளவுதான். அது மட்டும் அல்ல, பின்னால் “விண்ணையும் மண்ணையும் வைத்து வாங்குவாய்” என்கிறார். 

இதை சைவ சித்தாந்தம் முதலுர்பவம், புனருற்பவம் என்கிறது.

ஆதியில் தொடங்கிய உற்பத்தி, அப்புறம் பின்னால் தோன்றிய உற்பத்தி. 

மெய்கண்டர் உரை எழுதும் போது கூறுவார் 

“பிரபஞ்சம்‌ அகாதியாகலின்‌ அம்முதற்கோடி ஈம்மனோரான்‌ அறியவாராமை யானும்‌”

என்றார். நம்மால் அறிய முடியாது என்கிறார். 

நட்ட மரம் நச்சு மரமாயினும் நட்டவர்கள் எப்படி வெட்ட மாட்டார்களோ, அது

போல, என்னை நீ தான் படைத்தாய்.

நான் சரி இல்லை என்றால், அதற்கு நீ தான் பொறுப்பு.

எனவே, என்னை ஏற்றுக் கொள் என்கிறார். 

தொகுப்பு: காசி விசுவநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *