தூத்துக்குடி புதிய கலெக்டராக லட்சுமிபதி நியமனம்
சென்னை: தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
:தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆட்சியராக இருக்கும் செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யபட்டடுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஆட்சியராக உள்ள பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கபப்ட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
கரூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பிரபுசங்கர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







