உலக விண்வெளி வார விழா: மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி கருத்துக்களை கொண்டு செல்வதற்கு நாடு முழுவதும் அக்.4 ம் தேதி முதல் அக்-10ம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைகோள் ஸ்புட்னிக் ஏவப்பட்ட தினம் அக் – 4,விண்வெளி ஆய்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட தினம் அக் -10, இதனை முன்னிட்டு விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்வையிடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார்.. அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி அறிவியல் ஆசிரியை இந்துமதி அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் தலைவர் எழிலன்,தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உலக விண்வெளி வார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி டெலஸ்கோப் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கீதாராணி, ரேகா, தமிழ்ச்செல்வி, சங்கீதா, சீதா,சுஜா,ராமமூர்த்தி, உமா சங்கரி உள்பட ஆசிரியர்கள்,மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.







