பாண்டவர்மங்கலம் ஊராட்சி கிராமசபை கூட்டம்
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து , கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, ராஜீவ் நகர் இ.பி. காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகல் வேண்டி அதற்கான கோரிக்கைகளை வழங்கினார். அவருடன் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் கலந்து கொண்டார்.







