கோவில்பட்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைப்பெற்றது. ஸ்ரீ வெற்றி விநாயகரருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதற்கான பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இந்த பூஜையில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
