• May 3, 2024

71-வது பிறந்தநாள்: தே.மு.தி.க. தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

 71-வது பிறந்தநாள்: தே.மு.தி.க. தொண்டர்களை சந்தித்தார் விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்தின் பிறந்தநாளை தே.மு.தி.க.வினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த், தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி இன்று  காலையில் இருந்து தே.மு.தி.க.தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஜனவரி 1-ந்தேதி விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு இன்று சந்திக்கிறார் என்பதால் தொண்டர்கள்  மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்டனர்.

ஏற்கனவே அறிவித்தபடி , சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அலுவலகம் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார்ப். சோபாவில் அமர்ந்தபடி வந்த அவர் வெள்ளை நிறத்தில் பேன்ட்.சட்டை அணிந்து இருந்தாரர். கூலிங் கிளாஸ், கருப்பு நிற ஷூ வுடன் காணப்பட்ட விஜயகாந்த் முக கவசம் அணிந்து இருந்தார்.

மேடைக்கு வந்ததும் அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். கூடியிருந்த தொண்டர்களும் ஆரவாரத்துடன் கேப்டன், கேப்டன் என முழக்கமிட்டனர். விஜயகாந்துடன் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மேடையில் இருந்தனர். மேடையில் இருந்தபடி தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கைகளை குவித்து வணங்கியும், வெற்றியின் அடையாளத்தை காட்டியபடியும் இருந்தார். விஜயகாந்தை சந்தித்த தொண்டர்கள் ஒவ்வொருவரும் செல்போனில் அவரை படம் பிடித்தனர்,

அப்போது பேசிய பிரேமலதா, “தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நலமாக இருக்கிறார். விஜயகாந்த் நீண்டகாலம் இருப்பார். நமது முரசு, நாளைய தமிழக அரசு” என்றார்.
விஜயகாந்தை சந்திக்க கூடியிருந்த தொண்டர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *