கோவில்பட்டி தொகுதி தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் கூட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், அழகுராஜ், சின்னத்தாய்,மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செல்வ மணிகண்டன் மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், முருகன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை உட்பட பாக முகவர்கள்,கிளை கழகச்செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
