இலுப்பையூரணி சண்முக நகரில் புதிய சாலை அமைக்கும் பணி
கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சண்முக நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் கவியரசன், செண்பக மூர்த்தி, வள்ளி யம்மாள், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







