தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழா: 10 இடங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போலீஸ் ஏற்பாடு

 தூத்துக்குடி பனியமய மாதா கோவில் திருவிழா: 10 இடங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போலீஸ் ஏற்பாடு

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 16வது தங்கத்தேர் திருவிழா) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி  வரை விழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 29.7.2023, 30.7.2023, 3.08.2023, 4.08.2023 மற்றும் 5.08.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி செய்யப்பட்டுள்ளது என்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

வ.உ.சி. சாலை வழியாக வரும் வாகனங்கள்

*தூத்துக்குடி வ.உ.சி. (WGC ரோடு) சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், வடக்கு காட்டன் ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்

 *தூத்துக்குடி வ.உ.சி (WGC ரோடு) சாலை வழியாக பழைய முனிசிபல் ஆபீஸ் ஜங்ஷன், Fire Service ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் ரோடு, PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்.

 வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்

*தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள முத்துநகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும்.

தெற்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்

தெற்கு கடற்கரை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் நிறுத்தவும். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

ஜார்ஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்

ஜார்ஜ் ரோடு வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் ரோட்டிலுள்ள தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று ஜார்ஜ் ரோட்டிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன், தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று St.பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், PPMT ஜங்ஷன் வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *