• October 27, 2026

பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை

 பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை: சிறப்பு டி.ஜி.பி.க்கு 3 ஆண்டு சிறை

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.

பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டி.ஜி.பி. திரிபாதிக்கு புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த புகாரின் அடிப்படியில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவிபடி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ராஜேஷ் தாஸ் உத்தரவிபடி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பை தொடர்ந்து ராஜேஷ் தாஸ் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *