ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் மகள் திருமணம்; வைகோ நடத்தி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், கோவில்பட்டி நகரசபை துணை தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ்-சசிபிரியா தம்பதியரின் மகள் டாக்டர் எஸ்.ஆர்.ஜனனிக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் துஷார் சிங்குக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இவர்களது திருமணம் இன்று காலை கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், மற்றும் தொழில் அதிபர்கள், நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







