இடைசெவல் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டுவிழா

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இடைசெவல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதி திராவிடர் கிழக்கு காலனியில் ரூ.10 லட்சம் செலவில் வாறுகால் பணி ,,பேவர் பிளாக் சாலை அமைப்பு பணி நடக்க இருக்கிறது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்,
