கோவில்பட்டி மக்களை குளிர்வித்த திடீர் மழை
கோவில்பட்டி நகர மக்கள் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்தனர்,. 95 டிகிரி வெயில் கொளுத்தினாலும் உஷ்ணத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.
பகல் நேரத்தில் வெளியே செல்லவே தயங்கும் நிலை காணப்பட்டது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க இளநீர், சர்பத் கடைகளை தேடி மக்கள் சென்றனர். மேலும் தர்பூசணி பழத்தின் விற்பனையும் அதிகரித்தது.
இந்த் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு மேல் திடீரென கால நிலை மாறியது. 2.45 மணிக்கு திடீர் மாலை கொட்டியது. கன மழையாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சுமார் அரை மணி நேரம் இந்த மழை பெய்தது. அதன்பிறகு தூறல் விழுந்த வண்ணம் இருந்தது,. வெயில் கொடுமையை அனுபவித்து வந்த மக்களுக்கு இன்றைய மழையானது சற்று குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையின் இரு பக்கமும் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் வாறுகால் வழியாக தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.