எதிர்க்கட்சி தலைவர் பற்றி கனிமொழி விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்
சென்னையில் சிங்காரவேலரின் 164 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-.
சிங்காரவேலரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடவேண்டும் என்று அரசாணை வெளியிட்டதன் அடிப்படையிலே இன்றைக்கு அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுகிறது.அவரின் அருமை பெருமை குறித்துப் பேசவேண்டும் என்றால் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம்.பகுத்தறிவாதி,சிந்தனைவாதி,ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர்,ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடுபட்டவர்.சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளைச் செய்தார்.இன்றைக்கும் வரலாற்றிலே முத்திரை பதிக்கும் வகையில் அவரின் செயல்பாடு இருந்தது.
வழக்கறிஞராக இருந்து ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.எண்ணிடலங்கா புத்தகங்களை எழுதியவர்.புத்தகங்கள் என்று சொல்லும்போது ஒரு சமுதாய நோக்கு,பகுத்தறிவைத் தாங்கி மூட நம்பிக்கையை ஒழித்து அதன் அடிப்படையிலே தட்டி எழுப்பியவர்.அப்படித் தட்டி எழுப்பியதோடு மட்டுமல்லாமல்,இந்தியாவிலேயே முதல் முதலாக மே தினத்தைக் கொண்டாடிய ஒரு தோழர்.

இந்தியாவில் மே தினம் கொண்டாடப்படாத ஒரு சூழ்நிலையிலே முதல் முதலாகத் தொழிலாளர் தினம் என்று மே தினத்தைக் கொண்டாடிய ஒரு பெருமைக்கு சொந்தக்காரர்.அப்படிப்பட்டவர் ஒரு உலகம் போற்றும் உத்தம தலைவராக இருந்து வாழ்ந்து,மறைந்து இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்களிடமும் சரி,பகுத்தறிவாளர்களிடம் நிலைத்திருக்கிறார் என்றால் சமுதாயத்திற்கு அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
எனவேதான் கழகத்தின் சார்பில் அம்மாவின் அரசில் அவருக்கு ஒரு நினைவு மண்டபம் ராயபுரம் தொகுதியிலே அமைத்துக் கொடுத்து அம்மா அவர்களே திறந்துவைத்தார்.அவரின் பெயரில் ஆண்டுதோறும் விருது கொடுக்கின்ற நிகழ்வும் அம்மாவின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் ,அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு
கேள்வி : சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளாரே
பதில் : இந்த விடியா திமுக அரசில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பதும்,உடலை வருத்திக்கொண்டு கோரிக்கையை நிறைவேற்றும் செயல் ஒரு தொடர்ச்சியாக நடைபெறுவதை நீங்கள் அனைவரும் பார்த்துவருகிறீர்கள்.அவர் பெட்ரோல் ஊற்றும்போது பத்திரிக்கையாளர்கள்தான் சென்று காப்பாற்றினார்கள்.காவல்துறை அவரின் வாயை பெத்தி,குண்டுகட்டாக தூக்கி,அடித்து உதைத்து இழுத்துச் சென்றனர்.அவர் மனு அளித்துவிட்டுப் போகட்டுமே.இதில் என்ன இருக்கின்றது,அவர் வயிற்றுப் பிரச்சனை,உரிமைப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும்போது,அவரை மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.ஆனால் பத்திரிக்கையாளர்களிடம் பேச விடாமல் செய்து இழுத்துச் சென்றுவிட்டனர். பின்பு விசாரித்துப் பார்த்தால் 144 வட்டத்திலே திவாகர் என்ற கவுன்சிலர் இவரின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டார் என்பதற்காகப் பல முறை மனு அளித்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.இதே ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் என்ன சொன்னார்.யாராக இருந்தாலும் என்னை நேரில் சந்திக்க வரலாம் என்றும் உங்களுக்கு ஒரு கார்டு வழங்குவோம் என்று சொன்னார்.யாராவது சென்று பார்க்க முடியுமா.வாய் எல்லாம் பொய். பின்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் பாக்ஸ் வைப்பேன் என்றார்.பாக்ஸ் வைத்து கலெக்சன் செய்துவதற்கு குறியாக உள்ளார்களே ஒழிய,ஒவ்வொரு மாவட்டத்திலும் குறை தீர்க்கும் பாக்ஸ் வைத்து அந்த மனுக்களை எல்லாம் நானே படித்துப் பார்ப்பேன்,அதன் மீது நடவடிக்கை எடுப்பேன் சொன்னார்.அதனையும் செய்யவில்லை. இரண்டு வருடம் ஆகிறது.எத்தனை பேர் இவரை நேரடியாகத் தலைமைச் செயலகத்தில் பார்த்துள்ளார்கள்.

கேள்வி : எதிர்க்கட்சித்தலைவர் மீது கனிமொழி கடுமையான விமர்ச்சனத்தை முன்வைத்துள்ளாரே
பதில் : இந்தியாவில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு.நடமாடும் சுதந்திரம் உண்டு.வாக்காளரை நடமாடவே விடுவதில்லையே.அவர்களை ஆடு,மாடு போல அடைத்து வைத்து காலையில் 500 ரூபாய்,மாலையில் 500 ரூபாய்,பிரியாணி என்று திருமங்கலத்தை மிஞ்சுகிற அளவுக்கு இந்த தேர்தல் உள்ளது. அத்தைதான் எதிர்க்கட்சித்தலைவர் கேட்டார்.எங்கள் கூட்டத்திற்கு வந்தால் அவர்கள் மாறிவிடுவார்களாம். 1980 ல் இவர் சொல்லித்தான் புரட்சித்தலைவர் ஆட்சியை இந்திராகாந்தி ஆட்சியைக் கலைத்தார்.பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் கழகம் வந்தது. வந்த காரணத்தினாலே தலைவருக்கு ஆதரவு இல்லை என்று கலைத்துவிட்டார்கள். கலைத்த உடனே கருணாநிதி இந்திராகாந்தியில் என்ன சொன்னார் தெரியுமா. 114 சீட்டை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.நாங்கள் 144 சீட் எடுத்துக்கொள்கிறோம் என்றார்.பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்கிறார்கள்.இதுபோன்று பாதி,பாதி என்று சொன்ன நிகழ்வு உண்டா. கூட்டணி ஆட்சி அமைக்கவும் நான் ரெடி என்று சொன்னார்.அவர் எண்ணம் முதலமைச்சராக இருந்தால் மட்டும் போதும். இதைவிடக் கொத்தடிமையான,மானம்கெட்ட பொழப்பா,பதவி ஒன்றை மட்டுமே பிரதானமாக வைத்து,கொள்கைகளை அடமானம் வைத்து,உரிமைகளை தூக்கி போட்டுவிட்டு,பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒரு கூட்டம் திமுக என்பதை அவரின் அப்பா காலத்திலேயே நிருபித்துவிட்டார்கள். கனிமொழி அவரின் அப்பாவின் சமாதியில் சென்று கேட்கட்டும். ஏன் இப்படிச் செய்தீர்கள்.எங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்று கேட்கட்டும்.புரட்சித்தலைவர் அமெரிக்காவில் இருக்கும்போது மானம்கெட்டதுமாகக் கருணாநிதி என்னுடைய அருமை நண்பர் திரும்பிவரட்டும்.நான் முதலமைச்சராக இருந்துகொள்கிறேன் என்று சொன்னார்.அப்படி பதவியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதற்கு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி செயல்பட்டவர்கள் அவர்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.







