ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு கடம்பூர் ராஜு வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கருங்கல்பாளையம் நேதாஜி நகரில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் , அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது அங்குள்ள டீக்கடையில் பொதுமக்களுடன் சேர்ந்து டீ குடித்தார். அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
கடம்பூர் ராஜூவுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், அதிமுக கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, எட்டையபுரம் நகரச் செயலாளர் ராஜ்குமார், போடு சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

