டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோவில்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த 18-11-2022 இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் வேலையை முடித்து கிளம்பும் பொழுது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்த்தனர்
அவர்கள் கத்திமுனையில் மிரட்டி ரூ. 1,50,470 _ஐ கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் டாஸ்மாக் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி சிலுவைப்பட்டி துரைசிங் நகரைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் என்பவரின் மகன் விக்ரம் என்ற விக்கி(22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்த் என்ற அசோக் (29) ஆகிய கைது செய்து சிறையில் அடைத்தனர்

கைதான அசோக் என்பவனுக்கு வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உள்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகளும் விக்ரம் என்ற விக்கிக்கு (5) வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டம் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் விக்கி, அசோக் இருவரும் குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டனர்.







