சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி
மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது,
இந்த கண்காட்சியுடன் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் .பெ.கீதா ஜீவன் இன்று (25.1.23) திறந்து வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் .கி.செந்தில் ராஜ்., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், மத்திய மக்கள் தொடர்பகம் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை ,தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி சார் ஆட்சியர் .கவுரவ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்,







