கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு உலக கோப்பை ஆக்கி போட்டி விழிப்புணர்வு

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உலக கோப்பை ஆக்கி போட்டி நடைபெற இரு கிறது. இந்த போட்டி பற்றிய விழிப்புணவு நிகழ்ச்சி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய ஆக்கி அணியின் தேர்வு குழு உறுப்பினருமான முகமது ரியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆக்கி விளையாட்டின் மகத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
பள்ளி தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். இயக்குனர் விஜயராணி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மலர்கொடி வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, உறுப்பினர்கள் முருகன், காளிமுத்து, பாண்டியராஜா, மூர்த்தி, சந்தானராஜ், தெய்வபாலன் , மணிமாறன், பெரியதுரை, உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு ஆக்கி விளையாட்டின் நுணுக்கங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின். உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் ஆகியோர் கற்றுக்கொடுத்தனர். அனைத்து வீரர்களுக்கும் உலககோப்பை லோகோ பொறிக்கப்பட்ட பனியன் வழங்கப்பட்டது.ல் உலக கோப்பை சின்னம் பொறிக்கப்பட்ட ஆக்கி மட்டை, பள்ளிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி துணை முதல்வர் சுதாகர் நன்றி கூறினார்,
