• October 28, 2026

பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; போலீஸ் தடியடி

 பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; போலீஸ் தடியடி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவையொட்டி பண்பாட்டு கழகம் சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஊர்வலத்தில் சென்ற வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் கோவை ரோடு, ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஊர்வலமாக செல்லுமாறும் கூறியுள்ளனர்.

ஆனால் சில வாலிபர்கள் போலீசாரின் அறிவுரையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுக்க முயன்றதாக தெரிகிறது.

 இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிலர் சாவியை எடுக்க விடாமல் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி கையைப்பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் வாலிபர்கள் அங்கிருந்து சிதறி நாலாபுறமும் ஓடினர். மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுக்காலியூர் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *