கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி செபஸ்தியார் என்பவர் கடந்த கடந்த 05-05-2014 அன்றுபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அந்தோணி விமல் ராஜ், சின்னப்ப ராஜ், அருள் ஆரோக்கிய தாஸ், தங்கம், ஜஸ்டின் தாஸ், ஜான் பிரபாகர், விக்னேஷ் இன்பராஜ், தாமரைக்கண்ணன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்,
கைதானவர்கள் மீதான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.







