கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தோழர் அபிராமி முருகன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . *மந்திதோப்பு சாலை விரிவாக்கம் போராட்டம் காரணமாக பேட்ச் ஒர்க் வேலை நடந்துள்ளது. சாலை விரிவாக்கம் குறித்த பணியினை அரசு மட்டத்தில் எடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளை சந்தித்து பேசுவது. *போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். […]







