கோவில்பட்டி முகாமில் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு 17 பேர் தேர்வு
Oplus_16908288
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறு அன்று இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகின்றன.

ஆகஸ்ட் மாத கடைசி ஞாயிறு அன்று 23-8-2026 கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தொழிலதிபர் என்.ராஜவேல் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன்,ராஜேந்திரன்,தஅருள்ஜான்,பாலகுமார், மணிக்கொடி, திருச்சிற்றம்பலம், ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

முகாமில் 67 பேர் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன. இறுதியில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.







