திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் வெட்டிக்கொலை
Oplus_16908288
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவிக தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. மாரியப்பனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு ஆவணி மாதம் கடைசியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் மாரியப்பன் இன்றுb திங்கட்கிழமை மதியம் திரு.வி.க தெருவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான வயல் காட்டில் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி தகவலறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், கிங்ஸ்லி தேவானந்த், சுஜித் ஆனந்த், பாரதிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாரியப்பனின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாரியப்பனை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று
போலீசார் நடத்திய விசாரணையில் ஆடித்தபசு திருவிழாவில் சாமி சப்பரம் தூக்கி வரும் போது மாரியப்பன் தெரியாமல் ஒருவரின் காலை மிதித்த விவகாரம் கொலையில் முடிந்தது தெரிய வந்துள்ளது.
சங்கரன்கோவில் சங்குபுரம் 2ம் தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் மாரியப்பன் சங்கரநாராயண சுவாமி கோவில் விழா காலங்களில் சப்பரம் தூக்கும் (சீர்பாதம்) வேலை செய்து வருகிறார். நடந்து முடிந்த ஆடித்தபசு திருவிழாவின் போது சப்புரம் தூக்கிக் கொண்டு வரும்போது கூட்டத்தில் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் தந்தையின் காலை மிதித்து விட்டார்.
அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் தெரியாமல் மிதித்து விட்டேன் என்று மாரியப்பன் கூறியுள்ளார்.

அதோடு பிரச்சினை முடிந்த நிலையில் அன்றிலிருந்து மாரியப்பனுக்கும் கருப்பசாமிக்கும் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவிக நகர் பகுதியில் உள்ள ஐயர் கிணறு அருகே மது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் கருப்பசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரியப்பனை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் கருப்பசாமியை தேடி வருகிறார்கள்.







