தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
Oplus_16908288

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இயக்க சீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கோவில்பட்டி வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி,பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை,ஐஎன்டியுசி ராஜாசேகரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் பூவை ஜேம்ஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் செல்லதுரை,ஆறுமுகம், போலீஸ் வேணுகோபால், தர்மர், எஸ்சிஎஸ்டி பிரிவு மாநிலத் தலைவர் மாரிமுத்து,எட்டையபுரம் நகர தலைவர் குனசேகரன், கழுகுமலை நகர தலைவர் சங்கர்,கயத்தார் சந்தனம் பாண்டியன், வேம்பார் செல்லப்பாண்டி,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவிதனலட்சுமி, முத்துரதி,அன்பரசி, வசந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்







