கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: நகராட்சிக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை
Oplus_16908288

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தோழர் அபிராமி முருகன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

*மந்திதோப்பு சாலை விரிவாக்கம் போராட்டம் காரணமாக பேட்ச் ஒர்க் வேலை நடந்துள்ளது. சாலை விரிவாக்கம் குறித்த பணியினை அரசு மட்டத்தில் எடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளை சந்தித்து பேசுவது.
*போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளையும் மற்றும் கூட்டம் கூட்டமாக மக்களை பயமுறுத்தும் வகையில் திரியும் நாய்களையும் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 28.8.2026 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன் , செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கே கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் எம் ரவிக்குமார், மக்கள் நீதி மய்யம் கமல் ரமேஷ், கல்லூரணி ராதாகிருஷ்ணன், திராவிட கழகம் செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர் ஐ. என். டி. யு. சி. மகேந்திரன், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் நிர்வாகிகள் ராமலட்சுமி, தவம் பாலாஜி, கணேசன், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







