கோவில்பட்டியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Oplus_16908288

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேமுதிக மாவட்ட சமூக வளைதள அணி செயலாளர் சதீஷ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்குவடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலை வகித்தனார்.
விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன்,மலைராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் காளிதாஸ், சத்தியமூர்த்தி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகன், மாவட்ட தொழிற்சங்க துணைசெயலாளர் சுப்புராஜ், மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன்,மதிமுத்து ஆழ்வார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஓட்டப்பிடாரம், எட்டையாபுரம், விளாத்திகுளம்,புதூர், கயத்தார் ஆகிய பகுதிகளில் தேமுதிக நிர்வாகிகள் ஏற்பாட்டில், விஜயகாந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது







