இன்புளுவென்சா என்ற வைரசால் ஏற்பட்டுள்ள சுவாச தொற்று நோய் பன்றிக்காய்ச்சல் ஆகும். முதலில் பன்றிகளில் இருந்து பரவிய இந்த பன்றிக்காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பன்றிக்காய்ச்சல் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 […]
மலையாள மொழியில் பாரம்பரியமாக ‘கேரளம்’ என்றே அழைக்கப்பட்டு வந்த நிலையில், மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் மாற்ற கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மற்றும் மத்திய அரசின் பதிவேடுகளிலும் இப்பெயர் மாற்றத்தை நடைமுறைப்படுத்த அரசியல் சாசன பிரிவு 3-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் திரவுபதி […]
தமிழக அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீதம் இடங்களை தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2010-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர் அரசு பணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல் இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது. இந்த சூழ்நிலையில் சென்னை ஐகோர்ட்டு, ஏற்கனவே அரசுப் பணியில் […]
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பை பொறுத்து குறித்த நேரத்திலோ அல்லது கால தாமதமாகவோ அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் உட்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் சுமார் […]
தூத்துக்குடியில் ரூ.7 ஆயிரம் கோடியில் மின் உற்பத்தி வாகனஉற்பத்தி தொழிற் பூங்கா உள்பட மொத்தம் 22 முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் தொழிற்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டார். அவர் இது பற்றி கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் பகுதியில் 1,294 ஏக்கர் பரப்பளவில் ரூ.7,000 கோடி முதலீடு மற்றும் 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் சார்பில் மின் வாகன உற்பத்தித் தொழிற்பூங்கா அமைக்கப்படும். முடிவைத்தானேந்தல் சிப்காட் பூங்கா: முடிவைத்தானேந்தல் பகுதியில் ரூ.5,000 […]
ஓணம் பண்டிகை – கேரள மக்களால் சாதி மத வேறுபாடு இன்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரிய திருநாளாகும். மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் திருவிழாவாகும். புராணங்களின் படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தனது மக்களை காண பூமிக்கு வரும்போது மன்னரை வரவேற்கும் வகையில் தும்பை,செம்பருத்தி மற்றும் வண்ண மலர்கள், இதழ்களைக் கொண்டு வட்ட வடிவமாக அலங்கரித்து திருவிழாவாக கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் […]
இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில், 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், குறைவாக மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் – நிக்கோபார், சத்தீஷ்கர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளும் உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் இருக்கின்றன. இதேபோல், நாடு முழுவதும் 4,123 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், குறைந்தபட்சமாக புதுச்சேரி மற்றும் சிக்கிமில் தலா 32 தொகுதிகளும் […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5 வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் அசோக் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன் செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன் பாலமுருகன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஜ்ரங் நர்த்தனாலயா நாட்டிய பள்ளி ஆசிரியர்கள் லதா கணபதி ,ஐஸ்வர்யா கணபதி தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. […]
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே, ஆதனூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). இவரது மகன் கருப்பசாமி.(21) இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. , நேற்றிரவு வழக்கம் போல மதுபோதையில் வீட்டிற்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மகனின் தொடர் தொல்லை மற்றும் தகராறால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டில் இருந்த […]
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட சமூக வளைதள அணி செயலாளர் சதீஷ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்குவடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கொம்பையா பாண்டியன், கோவில்பட்டி நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன் முன்னிலை வகித்தனார். விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி புகழ் […]







