கோவில்பட்டியில் ஓணம்பண்டிகை : அத்தப்பூ கோலம் போட்டு அசத்திய கல்லூரி மாணவிகள்
Oplus_16908288
ஓணம் பண்டிகை – கேரள மக்களால் சாதி மத வேறுபாடு இன்றி 10 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பாரம்பரிய திருநாளாகும்.
மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

புராணங்களின் படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தனது மக்களை காண பூமிக்கு வரும்போது மன்னரை வரவேற்கும் வகையில் தும்பை,செம்பருத்தி மற்றும் வண்ண மலர்கள், இதழ்களைக் கொண்டு வட்ட வடிவமாக அலங்கரித்து திருவிழாவாக கேரளா மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த ஓணம் பண்டிகை திருவிழாவில் அத்தப்பூ கோலம் போட்டு மாணவிகள் அசத்தினர்
கல்லூரியில் மாணவிகள் அத்தப்பூ கோலம் வரைந்தும்,பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், முத்துச்செல்வம்,
சமூகத்தணிக்கைமாவட்ட வள அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்தப்பூ கோலம் வரைந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரியப்பன்,நடராஜன்,கிருஷ்ணசாமி, சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் கருப்பசாமி,கல்லூரி ஆசிரியர்கள் சென்மதி, பூபதி,மகேஸ்வரி, பாண்டீஸ்வரி, செல்வகுமாரி, அருள் முருகன் உள்பட 250 க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி ஆசிரியை தேவி நன்றி கூறினார்.







