கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை 5-வது ஆண்டு விழா நலத்திட்ட உதவிகள்
Oplus_16908288



கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் 5 வது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது..
நிகழ்ச்சிக்கு செயற்குழு உறுப்பினர் அசோக் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன் செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன் பாலமுருகன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பஜ்ரங் நர்த்தனாலயா நாட்டிய பள்ளி ஆசிரியர்கள் லதா கணபதி ,ஐஸ்வர்யா கணபதி தலைமையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (ப.நி) பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுநல மருத்துவமனைக்கு இரும்பு நாற்காலிகள் , மற்றும் அரசு மருத்துவமனையில் அதிக முறை ரத்த தானம் வழங்கியவர்களை விருது வழங்கி பாராட்டினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக எவரெஸ்ட் பள்ளிகளின் தலைவர் அய்யனார், பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் கிருஷ்ணமூர்த்தி, பொதுநல மருத்துவமனை தலைவர் திலகரத்தினம், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் கார்த்தீஸ்வரன், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜா என்ற விஜி, விஏஓ மந்திர சூடாமணி, மற்றும் அருண் பேக்கரி மாடசாமி ,கணபதி ஜுவல்லர்ஸ் கதிரேசன், தினேஷ் பாலாஜி, தனபால், கொல்லம் சேகர் , கணபதி ,ஆக்ரா காளிராஜ், லட்சுமி டெக்கரேஷன் சண்முகவேல் , அரிசி கடை பிரபாகரன்,சுப்புராஜ் நினைவு கல்வியில் கல்லூரி தாளாளர் ராமச்சந்திரன்,அரசு ஒப்பந்ததாரர் காளிதாஸ் ,பொதுநல மருத்துவமனை பொருளாளர் கோபாலகிருஷ்ணன்,

மற்றும் தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமரன், அன்பழகன், ஆசிரியர்கள் ஜீவானந்தம், ஆனந்த செல்வன்,தனபாலன், மகேஸ்வரன். வழக்கறிஞர் ரேவதி, ஏழாயிரம் பண்ணை பாண்டி, நாகஜோதி மேட்ச் பாலமுருகன், ஜீவா அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், பசுமை இயக்கம் செந்தில், சரத் மணி ,பூக்கடை செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜ் ,எஸ்பி பாண்டியன், மாரிமுத்து, முருகன், மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் லவராஜா நன்றி கூறினார்







