விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் காற்றின் வேகம் திசை மற்றும் சூழலை கண்காணிக்கும் பணியிலும் களப்பபாளர்கள்ர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நிலவும் தீ பரவும் சூழல் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படக்கூடியதை கருத்தில் கொண்டு நிலைமை பாதுகாப்பானதாகவும், இயல்பானதாகவும் மாறும் வரை இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுமக்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து […]
கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகளுக்கு உளுந்து விதை மற்றும் இடுபொருள்கள் 50 சதவீத மானியத்தில் விநியோ கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக உயர்தர உளுந்து விதைகள் மற்றும் இடுபொருள்கள் 50 சதவீத மானிய விலையில் வழங் கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வம்பன் 11 (விபிஎன் 11) உளுந்து […]
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரைச் சீரான முறையில் வெளியேற்றுவது தொடர்பாக, மழைநீர் வடிகால் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரைச் விரைவாக வெளியேற்றுவது குறித்து வடக்கு கடற்கரை சாலை, தெற்கு கடற்கரை சாலை, எஸ்.ஆர்.எம். சாலை, ஜார்ஜ் சாலை, காமராஜ் கல்லூரி சாலை, சிவந்தாகுளம் […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நிறுவனர் கே.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு, கல்லூரி மற்றும் சென்னை பிரீடம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் இலவச செயற்கை கால் மற்றும் செயற்கை கை வழங்குவதற்கான அளவீட்டு முகாம், செப்டம்பர் 6-ந் தேதி காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்பு குழந்தைகளுக்கான இருக்கை, நடைபயிற்சி மற்றும் நிற்கும் உபகரணங்கள், […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில்இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் இதர பல்வேறு மனுக்கள் என […]
தமிழ்நாடு சட்டசபையில் 110 விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதல்-அமைச்சர் விஜய் கூறியதாவது; விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.289, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ.150ம் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750, பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,600 கிடைக்கும். சர்க்கரை ஆலைகளில் கரும்பு […]
16 வயதுக்கு உட்பட்டசிறுவர், சிறுமிகளின் சமூக வலைத்தள பயன்பாட்டினை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை;
கோவில்பட்டியை சேர்ந்த சிறார் கதை எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார், அதில் அவர் கூறி இருந்ததாவது:- தமிழகத்தின் எதிர்கால தூண்களான 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் சமூக வலைத்தளங்களின் அதீத பயன்பாடு, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட எனது ஆழமான அனுபவ ஆய்வின் புள்ளி விபர அடிப்படையில், சமூக வலைத்தளப் பயன்பாட்டின் உளவியல் காரணங்கள், அதன் விளைவுகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான 45 வகை விளையாட்டு போட்டிகள்; செப்டம்பா்
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பா் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆண்டுதோறும் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை தமிழகம் முழுவதும் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான இப்போட்டிகள் செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் மாவட்ட அளவில் தொடங்கப்படவுள்ளது. இதில் பங்குகொள்ள ஆா்வமுள்ளோா் வருகிற 31 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு […]
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கோவில்பட்டி அருகே கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள காரிசாத்தான் மலை அருகில் மலையடிபட்டி நிச்சோப நதி ஆற்றுப்படுகையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழரின் தொன்மையான நாகரீக வாழ்க்கை பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வரலாற்று ஆய்வாளரும் முன்னாள் ஆசிரியருமான ஸ்டீபன் அப்பாதுரை, கோவில்பட்டி நாட்டு நலப்பணி முன்னாள் திட்ட அலுவலர் சுப்பா ராஜூ ஆகியோர் கள ஆய்வு பணியை பார்வையிட்டனர். இது […]
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், தாலுகா செயலாளர் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். நகர உதவிச் செயலாளர் அலாவுதீன், தாலுகா உதவி செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உதவி செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் கரும்பன் ஆகியோர் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தனர் ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய பிரசார […]







