இந்திய நூலகவியலின் தந்தை என்று போற்றப்படும் எஸ். ஆர். அரங்கநாதன் 134வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையிலும், நூலகர்களின் சேவைகளைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாள் தேசிய நூலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவில்பட்டி எஸ்.எஸ். டி. எம். கல்லூரி நூலக துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மூன்றாம் ஆண்டு மாணவி மரிய அனுசியா வரவேற்று பேசினார். கல்லூரி […]
சிகரெட் லைட்டர் பிரச்சினை: முதலமைச்சர் விஜய் யை சந்தித்து முறையிட தீப்பெட்டி உற்பத்தியாளர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜய் ஆனந்த் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- தீப்பெட்டி தொழில் லைட்டர் வரவால் ரொம்ப பாதிப்படைந்து வருகிறது. தீப்பெட்டி தொழில் ஆரம்பித்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டது. 1923ல் தீப்பெட்டி தொழில் சிவகாசியில் தொடங்கப்பட்டு இன்றைக்கு தென் தமிழ்நாடு, குடியாத்தம், காவேரிப்பட்டினம் என ஐந்து மாவட்டங்களிலும் பிரதான தொழிலாக உள்ளது. இதில் பெண் தொழிலாளர்களே 80 சதவீதம் வேலை பார்க்கின்றார்கள். ஏறத்தாழ 100 ஆண்டுகளை […]
தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் தேசிய கவுரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான சட்டபூர்வப் பாதுகாப்பு தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கும் கிடைத்துள்ளது. தேசிய கொடி, அரசியலமைப்பு சட்டம் மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய […]
அகில இந்திய சிகை மற்றும் அழகு கலை சங்கத்தின் கோவில்பட்டி கிளை நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் புதிய தொழில்நுட்ப கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் மினி தலைமை தாங்கினார். சிகை மற்றும் அழகு கலை அலங்காரம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் குறித்து சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் மினி, செய்தியாளர்களிடம் கூறியதாவது :- சர்வதேச மற்றும் தேசிய […]
சுங்கச்சாவடிகளின் அருகே வசிப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலுக்கு இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. நாடெங்கிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டுக் கட்டணமின்றி வாகனங்களை இயக்கலாம் என்ற தகவல் பரவியது. சுங்கச்சாவடிகளில் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளூர் வாசிகள் முற்றிலும் கட்டணமின்றி […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ், வழக்கறிஞர் ஜெய ஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வைத்தார். வணிகவியல் துறை பேராசிரியர் ஸ்ரீ ராம ஜெயா அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குரு […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீரகருப்பசாமி திருக்கோவிலின் 49-வது ஆண்டு ஆடி கொடை விழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதி நாட்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து, 9-ஆம் தேதி மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் 10- ஆம் தேதி வடக்கத்தி அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் […]
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு கல்லூரி கூட்டரங்கில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலாளர் செல்வம், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் திவ்யா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் ஸ்ருதி அறிமுகம் செய்து வைத்தார் பாம்பே இடிஎப் நியூக்ளியர் ப்ராஜெக்ட் நிர்வாக […]
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் அல்லது வரியும் விதிக்கப்படாது என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேறியது. மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா குறித்துப் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இச்சட்டம் புதிதாக எந்த வரியையோ அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையோ […]
கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரி, டைனமிக் லயன்ஸ் கிளப் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, போதை பழக்கத்திற்கு எதிராக, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்ட மனித சங்கிலி இயக்கம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து மனித சங்கிலியை துவக்கி வைத்தார். மனித சங்கிலியில் கல்லூரியின் செயலாளர் மகேந்திரன், இயக்குனர் மகேஷ் குமார், முதல்வர் பாண்டிராணி […]







