கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் துறைகளின் சார்பில் ‘ZESTA’ துறைசார் சங்க தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொழில்முறை பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் குமரேசன் தர்மசீலன் கலந்து கொண்டார் .முதல்வர் செல்வராஜ் மற்றும் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, கணினி பயன்பாட்டுத்துறை தலைவர் செல்வலட்சுமி முன்னிலை வகித்தனர். பிரபாகரன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கே. […]
டி.வி.எஸ். ,மோட்டார் கம்பெனி மற்றும் கோவில்பட்டி வெங்கடாசலம் ஏஜென்சி LLB இணைந்து டி.வி.எஸ்.சின் ஆடி மாத சிறப்பு கடன் மற்றும் எக்சேஞ்ச் மேளாவை நடத்துகின்றன, இந்த சிறப்பு விற்பனை மேளா எட்டயபுரம் சாலையில் உள்ள சி.சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் 3 நாட்கள், அதாவது வருகிற 27,28,29 ந்தேதிகளில்( (திங்கள் , செவ்வாய், புதன்கிழமை ) நடக்கிறது. இந்த மேளாவில் டி.வி.எஸ்.நிறுவன தயாரிப்புகளான எக்ஸ்.எல்.100 அலாய் வீல், ஜெஸ்ட் 110, ஜூபிடர் 110, ஜூபிடர் […]
நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணை தலைவர் அபிராமி முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மிகப்பெரும் கல்வி முறைகேடுகளுக்கு […]
தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (24) என்ற இளைஞர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், காவல் நிலையத்தில் திடீரென உடல்நலக்குறைவு (வலிப்பு) ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக் குற்றஞ்சாட்டி, […]
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்காகத் தமிழக முதலமைச்சர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார். காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குத் தமிழ்நாடு அரசு தொடர் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இதனிடையே, கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், கே.ஆர்.எஸ் (KRS) உள்ளிட்ட காவிரியின் குறுக்கே உள்ள […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி)யில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக என் பெற்றோர், என் கல்லூரி, என் பெருமை போதைப்பொருள் இல்லா எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி இயக்குநர் பா.மகேஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகம், இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் இ.எனலாப் பெரியார் கலந்துகொண்டு போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை பற்றி சிறப்புரையாற்றினார். முடிவில் முதலாம் ஆண்டு முதுகலை […]
கோவில்பட்டியில் இருந்து சென்ற மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகத்தினர் மாஞ்சோலை தேயிலை தோட்டத்
ஊதிய உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தின் போது திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனத் தலைவர் அன்புராஜ் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி மலர் வளையம் வைத்து உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாக கோவில்பட்டியில் மாவீரன் சுந்தரலிங்கனார் திருவுருவச் சிலைக்கு […]
தூத்துக்குடியில் விசாரணை கைதி மரணம் அடைந்தது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 17.7.2026 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில், தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின் போது 180 மில்லிலிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டறியப்பட்டதால், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய குற்ற எண். 751/2026 ச/பி […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக […]
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்; உறவினர்கள் போராட்டத்தில் கீதா ஜீவன்
தூத்துக்குடி அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் அருணாச்சலம் (24). இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்.சி.ஐ குடோன் அருகே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் இருந்தபோதே அருணாச்சலத்திற்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். […]







