கோவில்பட்டியில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க கிளை தொடக்கம்
சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் புதிய கிளை துவக்க விழா கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெரு ஸ்டாண்ட் பகுதியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கிளை தலைவர் சேவியர் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடியினை ஆலோசகரும் நகர் மன்ற உறுப்பினருமான சீனிவாசன் திறந்து வைத்தார்.
சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வயணப்பெருமாள். மாவட்ட செயலாளர் செல்வராஜ், கிளைச் செயலாளர் வைரமுத்து, பொருளாளர் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் அய்யாதுரை, துணைச் செயலாளர் கார்த்திக், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் தெய்வேந்திரன், சிஐடியு நகர கன்வினர் முருகன், ஒன்றியக் கன்வினர் மாரிச்சாமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல் , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மற்றும் கிளை உறுப்பினர்கள் காளிதாஸ், பிரபாகரன், பாலமுருகன்,கிறிஸ்டின் பிரபாகரன், கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








