பிளாஸ்டிக் பைகள் இல்லாத உலகத்தை உருவாக்கிட மாணவர்கள் உறுதியேற்பு
Oplus_16908288
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு தினம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் துணி மற்றும் சணல்,காகித பைகளை பயன்படுத்திட வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜீலை 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது
கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் இல்லாத உலகத்தை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மாணவர்கள் அனைவருக்கும் காகித பை மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரிமாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்துச்செல்வம்,ரோட்டரி சங்க செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சீனியம்மாள் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க துணை தலைவர் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காகிதப்பை மற்றும் துணி பைகளை வழங்கினார்.

ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,பள்ளி ஆசிரியர்கள் மகேஸ்வரி,உமாதேவி,பராசக்தி உள்பட பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசிரியை இந்திரா காந்தி நன்றி கூறினார்.







