நகராட்சி பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு கல்வி உபகரணங்கள்
Oplus_16908288
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறுவர் , சிறுமியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினரும் தொழில் அதிபருமான நடராஜன், கோவில்பட்டி கடலை மிட்டாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் கார்த்தீஸ்வரன், நகர மன்ற உறுப்பினர் சண்முகவேல், கொல்லம் சேகர், தனபால், ஏழாயிரம்பண்ணை பாண்டி, நாகஜோதி மேட்ச் மேலாளர் பாலமுருகன், வரதராஜன், பசுமை இயக்கம் செந்தில், ஆசிரியர்கள் ஜீவானந்தம், முத்துப்பாண்டி, கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியை மீனா நன்றி கூறினார்.







