கல்லூரி மாணவர்களின் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு பயிற்சி பட்டறை
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிக நிர்வாகவியல் துறையின் 2026 2027. கல்வியாண்டிற்கான மன்ற துவக்கவிழா மற்றும் இன்றைய சூழலில் மாணவர்களின் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.

இறை வணக்கத்துடன் துவங்கிய இந்த நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் முனைவர் பா. மகேஷ் குமார் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். துறையின் தலைவர் சிவசங்கர் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்.
பயிற்சி பட்டறையில் துாத்துக்குடி காமராஜர் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.ஆர்.பாலாஜி பயிற்றுனராக கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். பயிற்சி பட்டறைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் . துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.








