தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கே.பி.தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமணி அசாம் மாநிலத்தில் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் இன்று 27/06/2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம், கூட்டுடன்காடு கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி […]
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று போய் நாளை வா’, ‘சின்ன வீடு’, ‘டார்லிங் டார்லிங் […]
79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பள்ளி மாணவர்களுக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக நடைபெற்று வருகிறது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இப்போட்டி நடக்கிறது, அதன்படி இன்று ஜூன் 26 மொகரம் பண்டிகை அரசு விடுமுறை நாளில் போட்டிகள் நடைபெற்றன, காலை 6.30 மணி அளவில் நடைபெற்ற முதல் போட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளி ரெட் […]
தூத்துக்குடியில் மானிய கடன்கள் சிறப்பு நேர்காணல் திங்கட்கிழமை நடக்கிறது ; ஆட்சியர் விசு
சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளை (MSME DAY) முன்னிட்டு தூத்துக்குடி பைபாஸ் சாலை அருகில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் 29-6-2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மானிய கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் மாவட்ட தொழில் மைய மேலாளர் அ.ஸ்வர்ணலதா தலைமையில் நடைபெற உள்ளது,. இச்சிறப்பு நேரடி நேர்காணலில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தெர்மல்நகர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி தெர்மல்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தெர்மல்நகர் கோல்டன் வே-பிரிட்ஜ் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மிதுன்குமார் (வயது 33) என்பதும், அவர் 1 கிலோ 100 கிராம் […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- சட்டப்பேரவை என்பது ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக இருக்க வேண்டும். அதைவிட்டு, தனிநபர்களையோ தலைவர்களையோ இழிவுபடுத்தக்கூடிய இடமாகவோ, தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய இடமாகவோ அது மாறிவிடக் கூடாது. அனைவருக்கும் மரியாதை அளிக்கக்கூடிய இடமாக அது இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பவை எல்லாருடைய வாழ்க்கையிலும் சகஜமான ஒன்று. அதையெல்லாம், ஒரு உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் கொச்சைப்படுத்தும் […]
அசாம் மாநிலத்தில் ரைபிள்ஸ் ராணுவப் பிரிவில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சுடலைமணி, பணியில் இருந்தபோது வீர மரணமடைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கே.பி. தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தட்டி (எ) மூக்காண்டி என்பவரின் மகன் சுடலைமணி (31). இவர் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் இணைந்து, அம் மாநில எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மனைவியும், செந்தட்டி (6) என்ற மகனும், ரேணுகா […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 400 மற்றும் 200,மீட்டர் ஓட்ட பந்தயம்,குண்டு எறிதல்,நீளம் தாண்டுதல்,உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது.தடகள போட்டிகளில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. […]
தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. அப்போது சென்னை துறைமுகம் தொகுதி த.வெ.க. வேட் பாளர் சினோரா அசோக், தேர்தல் பணிமனையில் இருந்தார். அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர், சினோரா… அசோக்கையும், த.வெ.க. தொண்டர்களையும் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சேகர்பாபு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், சேகர்பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு […]
கோவில்பட்டி கோ வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறையின் சார்பில், “தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் எழுத்துத்திறன் மேம்பாட்டின் மூலம் மாணவர்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் ஒருநாள் ஊக்குவிப்பு நிகழ்ச்சி கல்லூரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ப.மகேந்திரன் ஒத்துழைப்போடு, கல்லூரி முதல்வர் பாண்டியராணி தலைமை தாங்கினார். கல்லூரி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் மப.மகேஷ்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் இந்து நாடார்கள் செந்தில்குமார நாடார் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் […]







