தமிழக சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய தமிகக வெற்றிக் கழகம் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் கூடியது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனிடையே தவெகவுக்கு […]
தமிழக சட்டசபை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. விஜய் யின் த.வெ.க. கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிக்கட்சியாக அதிக இடங்களை பிடித்துள்ளது. திமுக கூட்டணி கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. யாருக்கும் தனி மெஜாரிட்டி (118 தொகுதிகள் )கிடைக்கவில்லை. பொதுவாக இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய ஆட்சி அமைந்தால் அதை தொங்கு சட்டசபை என்று அழைப்பார்கள். தொங்கு சட்டசபை என்றால் தனக்கு ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டி இல்லாத […]
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா இந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து தீவிர பிரசாரத்திலும் சசிகலா ஈடுபட்டார். நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் ராம்குமார் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 222 […]
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வாகன விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நடிகர் ஜீவாவின் தந்தையான இவர், புது முகங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பது புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பது என தனி பாணியை பின்பற்றி பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம் ஆகும். சவுத்ரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் […]
திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையிலும், நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 7 மற்றும் 10-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 9-ந்தேதியிலும், கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 17070) வருகிற […]
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; ”சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கணிசமான அளவில் வெற்றிகளை வழங்கியுள்ள மக்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள்கட்சிக்கு காட்டுமன்னார்குடி […]
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. அதன் முடிவுகள் வரத் தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் விஜய் ஆட்சியை […]
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றி புதிதாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியான திமுக, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. திமுக கூட்டணி கட்சி 73 தொகுதிகளையே கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உட்பட16 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு: * மு.க.ஸ்டாலின் – கொளத்துார் * துரைமுருகன் […]
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு; திமுகவில் இருந்து தவெகவில் சேர்ந்தவர்
சென்னையில் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். ஏற்கனவே மூன்று முறை வெற்றி கண்ட இந்த தொகுதியில் நான்காவது முறையாக களம் கண்டார்,. 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் உதயமான இந்த தொகுதியில், ஆரம்பம் முதல் மு.க.ஸ்டாலினே வெற்றி வாகை சூடிவந்திருக்கிறார். ஆனால், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வந்தார். அவரை எதிர்த்து நின்ற த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றிருக்கிறார். […]
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் வரத் தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை […]







