கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை எற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி வந்துகொண்டிருந்தது. இன்று காலை கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் வந்தபோது சாலையில் நின்று கொண்டு இருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் , 8 பெண்கள் மற்றும் … ஒரு குழந்தை உட்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடுமலைபேட்டையைச் சேர்ந்த டிரைவர் […]
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முறைப்படி நிறைவடைந்தது. கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, அனைத்துக் கட்சிகளும் தங்கள் பலத்தைக் காட்டும் வகையில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்தின. மாலை 6 மணி ஆனவுடன் […]
நெல்லை கீழமுன்னீர்பள்ளம் வி.ஜி.பி. டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனித்தா (வயது 45). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18-ஆம் தேதி இரவு, இவர் தனது வீட்டின் குப்பைகளைக் கொட்டுவதற்காகக் கதவைத் திறந்து வெளியே சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 4 பேர் திடீரென ஜெனித்தாவின் வாயைப் பொத்தி வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர். அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பல், அவர் மறுக்கவே […]
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழன்) நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். அவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும். தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், பாடத்திட்ட மேம்பாட்டு மையம் மற்றும் உள்தர மதிப்பீட்டு மையம் இணைந்து பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மதிப்பீட்டு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பை, சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து நடத்தின. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பா. உமாதேவி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் ப. மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மூ. சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு […]
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான இன்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தனர். அப்போது வானதி சீனிவாசன் பேசியதாவது:- கோவை மாவட்டம் முழுவதும் கடந்த முறை போலவே அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த இரு தினங்களாக திமுகவின் கரூர் ரவுடி […]
கரூர் மாவட்டம் எம்.வெள்ளாளப்பட்டி கீரிக்கல் பாதையில் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளி சுப்புராஜ் (வயது 43) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சுப்புராஜ் மனைவி அம்மு என்கிற அழகுலட்சுமிக்கும், கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாய்ளப்பட்டி நரிக்கட்டியூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (36) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்கு சுப்புராஜ் இடையூறாக இருந்துள்ளார். இதனால் […]
2024 மக்களவை தேர்தலின்போது தாம்பரத்தில் நெல்லை விரைவு ரெயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. நெல்லை மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. நயினார் நாகேந்திரன் அவரது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சென்னை ஐகோர்ட்டில் […]
கடந்த முறையை விட அதிக பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும்.; அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார் சென்னையில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டு மக்கள் பாஜகவின் பிளவுவாத அரசியலை வெறுக்கிறார்கள். மக்கள் பாஜகவை வெறுக்கின்றனர். இந்தியாவில் மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது பாஜகதான். பாஜக ஆட்சியில் முன்னேறிய ஒரே ஒரு மாநிலத்தை காட்ட முடியுமா?.30 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் சாலைகள் படுமோசமாக உள்ளன. அதிமுக முழுமையாக […]
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500-க்கான கட்டண டிக்கெட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்கள் https://hrce.tn.gov.in மற்றும் கோவில் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகியவற்றில் தொடங்கி 22-ம் தேதி […]







