கோவில்பட்டி கல்லூரியில் ‘பாடத்திட்ட மேம்பாடு, மதிப்பீட்டு முறைகள்’ பயிற்சி வகுப்பு
Oplus_16908288
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், பாடத்திட்ட மேம்பாட்டு மையம் மற்றும் உள்தர மதிப்பீட்டு மையம் இணைந்து பாடத்திட்ட மேம்பாடு மற்றும் மதிப்பீட்டு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பை, சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து நடத்தின.

தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பா. உமாதேவி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் ப. மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மூ. சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் விஜயகுமார் (இ.ஆ.ப ஓய்வு) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில் விளைவுகள் அடிப்படையிலான கல்வி, நவீன பாடத்திட்ட வடிவமைப்பு. திறன் அடிப்படையிலான கற்றல் மற்றும் புதுமையான மதிப்பீட்டு முறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உயர்கல்வி இணை ஆராய்ச்சியாளர்கள் ஆர். கோகுலகிருஷ்ணன் மற்றும் சந்தோஷ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மதிப்பீட்டு முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
சென்னை ஜே.பி.ஏ.எஸ். மகளிர் கல்லூரியின் இயற்பியல் உதவிப் பேராசிரியர் ஆர்த்தி கணேசன், வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் சோபனா ஆகியோர் செயல்முறை அமர்வுகளை நடத்தினர்.

இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பாடத்திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் பாடத்திட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அ.பாண்டியராணி நன்றி கூறினார்.







