வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுக ளின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. ஈரானுக்கு […]
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜோதி(வயது 55). இவர் பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். புதன் கிழமை இரவு மது போதையில் இருந்த சில இளைஞர்கள் ஓசியில் சிகரெட் கேட்டனர். இதற்கு ஜோதி தர மறுக்கவே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து கடைக்காரரின் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜோதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு […]
கோவில்பட்டி மகா புவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 24ம் தேதி கால் நாட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து, அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. 300 கிலோ பலவகையான பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜைகளை பாலு அர்ச்சகர் செய்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி […]
முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் வருடாபிஷேகம், பங்குனி உத்திரம் உற்சவ விழா;
தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் வருடாபிசேகம் மற்றும் பங்குனி உத்திரம் உற்சவ விழா 1.4.2026 புதன்கிழமை, 2.4.2026 வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:- 1.4.2026 புதன்கிழமை காலை 6.30 மணி-: 7.35 மணி கணபதி ஹோமம் காலை 7.35 மணி முதல் 9.20 மணி வரை: – வருடாபிஷேக யாகசாலை பூஜை காலை 9. மணி: […]
கடந்த 2015ம் ஆண்டு விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (45/26) என்பவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கிழ் வழக்குபதிவு செய்தனர். மேற்படி வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை […]
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த தேமதிக வுக்கு ஓர்பு ராஜ்யசபை சீட் மாறும் 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன, ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு போராடிய நிலையில் திமுக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 0.43 சதவீத வாக்குகளையே பெற்ற தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது ஏன்?என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் துறைமும் சாலை திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் 25.3.26 ம்தேதி மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மது போதையில் இருந்தது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது. மேற்படி நபர் மீது […]
தூத்துக்குடி பூபாலராயபுரம், 6-வது தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தனசுடலைமணி (வயது 22). இவர் தூத்துக்குடி பிரையண்ட்நகரில் உள்ள தனியார் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று பணி நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் குளத்தூர் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தூத்துக்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். தருவைகுளம் பகுதியில் ஒரு ஓட்டல் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது […]
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் 14 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் களம் காண்கின்றன, அதாவது 14 தொகுதிகளில் தி.மு.க. அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடுவதை அ.தி.மு.க. தவிர்த்துள்ளது. அந்த வகையில், அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன் (ராசிபுரம்) ஆகியோர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிகள் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமைச்சர்கள் கே.என்.நேரு (திருச்சி மேற்கு), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நிலையில் கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]







