குடிபோதையில் டேங்கர் லாரி ஓட்டியவர் கைது -உரிமம் ரத்து
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் துறைமும் சாலை திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் 25.3.26 ம்தேதி மாலை வாகன சோதனை நடத்தினர்.

அப்போது வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மது போதையில் இருந்தது மூச்சு பரிசோதனை கருவி மூலம் கண்டறியப்பட்டது.
மேற்படி நபர் மீது குடிபோதை மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மூலம் சுமார் 15000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி டிரைவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.








