ஓசிக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜோதி(வயது 55). இவர் பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். புதன் கிழமை இரவு மது போதையில் இருந்த சில இளைஞர்கள் ஓசியில் சிகரெட் கேட்டனர்.

இதற்கு ஜோதி தர மறுக்கவே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து கடைக்காரரின் தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த ஜோதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 4பேரை கைது செய்தனர்.







