பங்குனி பொங்கல் திருவிழா : கோவில்பட்டி புவனகாந்தாரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை
Oplus_16908288
கோவில்பட்டி மகா புவனகாந்தாரி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 24ம் தேதி கால் நாட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து, அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது. 300 கிலோ பலவகையான பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூஜைகளை பாலு அர்ச்சகர் செய்தார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை
கோவில் தர்மகர்த்தா ரவிப்பாண்டியன் ,தலைவர் ஏமராஜ்.செயலாளர் மகேந்திரன்,பொருளாளர் காந்தாரிமுத்து மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமும் இரவு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மகா புவன காந்தாரி அம்மனுக்கு பங்குனி பொங்கல் விழா 10 நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 31ஆம் தேதி அக்னிசட்டி திருவீதி உலாவும் உச்சகால பூஜையும் முளைப்பாரி திருவிழாவும் 108 அக்னி சட்டி விழாவும், பூக்குழி திருவிழாவும், சாமக்கோட நிகழ்ச்சியும், பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது







