முப்பிலிவெட்டி மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் வருடாபிஷேகம், பங்குனி உத்திரம் உற்சவ விழா; 1, 2 ந்தேதிகளில் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் – ஒட்டப்பிடாரம் தாலுகா முப்பிலிவெட்டி கண்மாய்க்கரையில் அமைந்திருக்கும் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி சமேத மயிலேறும் பெருமாள் அய்யனார் திருக்கோவில் வருடாபிசேகம் மற்றும் பங்குனி உத்திரம் உற்சவ விழா 1.4.2026 புதன்கிழமை, 2.4.2026 வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

1.4.2026 புதன்கிழமை காலை 6.30 மணி-: 7.35 மணி கணபதி ஹோமம்
காலை 7.35 மணி முதல் 9.20 மணி வரை: – வருடாபிஷேக யாகசாலை பூஜை
காலை 9. மணி: -இந்து நாடார் அறக்கட்டளை சார்பாக அன்னதானம்
காலை 9.20 மணி: பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து அய்யனாருக்கு பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல்.
காலை 10.30 – 11.30 மணி: அய்யனாருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம்
மதியம் 12.00 மணி: அலங்காரம் மற்றும் தீபாராதனை
மாலை 3 மணி: கன்னிபூஜை
மாலை 5.மணி:: 216 திருவிளக்கு பூஜை
இரவு 9. மணி: வானவேடிக்கை
:இரவு 10.மணி: கருப்பசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி
2.4.2026 வியாழக்கிழமை காலை 9 மணி: சக்தி கிடா மற்றும் சேவல் அர்ப்பணித்தல்
பத்திரகாளி அம்மன் கோவில் நிகழ்ச்சிகள்
மயிலேறும் பெருமாள் அய்யனார் கோவில் கும்பிடும் இந்து நாடார் குலமக்களுக்கு மட்டும் பாத்தியப்பட்ட அய்யனார் தேவஸ்தானத்தில் அமைந்திருக்கும் மயிலேறும் பத்திரகாளி அம்மன் திருக்கோவில் பங்குனி உத்திரம் உற்சவவிழா நிகழ்ச்சி நிரல் வருமாறு:-‘
1.4.2026 புதன்கிழமை காலை 6.30 மணி:கணபதி பூஜை
காலை 9 மணி:பத்திரகாளி அம்மனுக்கு 16 அபிஷேக அலங்காரம், தீபாராதனை
இரவு 9 மணி: வானவேடிக்கை, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், கும்மிஅடித்தல், பாட்டு பாடுதல்
2.4.2026 வியாழக்கிழமை காலை 7. மணி: பத்திரகாளி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு.
காலை 9 மணி: அம்மனுக்கு சக்தி கிடா, சேவல், முடி காணிக்கை அர்ப்பணித்தல்.

உற்சவ விழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வெளியூர் பக்தர்கள் 1ந்தேதி இரவு கோவில் வளாகத்தில் தங்கி மறுநாள் விழாவில் கண்டு கொள்வார்கள். இவர்கள் குளிப்பதற்கு தேவையான தண்ணீர் வசதி மற்றும் சாப்பாட்டு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்படுகிறது.
மயிலேறும் பெருமாள் அய்யனார் தேவஸ்தான தலைவர்- எஸ்.தங்கவேல்,
துணைத்தலைவர்கள: தம்பிதுரை குடவாசல்,, ராமராஜ் குளத்தூர்
செயலாளர்: முருகேசபாண்டி ,சென்னை
துணை செயலாளர்கள்: தர்மராஜ் சென்னை .பாலகிருஷ்ணன் திருக்கழுக்குன்றம்.அய்யனார் மதுரை
பொருளாளர் :ரவிச்சந்திரன் மதுரை
கௌரவ தலைவர்கள் :பரமசிவம் -திருவல்லிக்கேணி ,.ஆறுமுகச்சாமி பல்ஜிகண்டை, ஆந்திரா
சட்ட ஆலோசகர்கள்: சிவக்குமார், அழகுதங்கமணி -சென்னை.
கௌரவ ஆலோசகர்கள்- 10 பேர்
செயற்குழு உறுப்பினர்கள் : 10 பேர்
பத்திரகாளிஅம்மன் கோவில் பூசாரி- சூரியபிரகாஷ்
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னின்று கவனித்து வருகிறார்.







