உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் பூஜைநேற்று (மார்ச் 2)) நடைபெற்றது. இப்படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. படபூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், பி.எல் தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய […]
கோவில்பட்டி அருகே தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் மாசி மகம் திருவிழாவை யொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காளசாந்தி பூஜைகள் நடந்தது. மதுரை, ராஜபாளையம், சிவகாசி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களி லிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்து பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து கழுகாசலமூர்த்தியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால்குடம் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்களுக்கான தேர்தல் (2026 முதல் 2029 வரை) உடுமலைப்பேட்டையில் நடைபெற்றது இதில் சேகர் ஜெ மனோகரன் தலைமையிலான அணி வெற்றி பெற்று பதவியேற்றது இந்த அணியில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முக பாரதி மாநில தேர்தல் குழு தலைவர் ஆகவும், பொருளாளர் காளிமுத்து பாண்டி ராஜா மாநில ஆக்கி போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களை முன்னாள் மாநில ஆக்கி யூனிட் ஆப் […]
கோவில்பட்டி பசுமை, தூய்மை இயக்கம் சார்பாக கோவில்பட்டி சிதம்பர நாடார் காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொழிலதிபர் ரவி மாணிக்கம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில துணைத்தலைவர் அபிராமி முருகன் வரவேற்று பேசினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி பேசினார். ரோட்டரி சங்க நிர்வாகி விநாயகா ரமேஷ், திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப்பாண்டி , வணிக சங்கத்தின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் […]
கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மையம், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறை மாணவி திவ்ய ஜோதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி சமூக […]
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று தொகுதி பங்கீட்டு பெச்சுவார்த்தை நடத்தியது. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக உடன் பேரம் பேசும் கட்சியாக நாங்கள் இருக்கமாட்டோம். தொகுதிப் பங்கீடு எங்கள் வலிமைக்கு ஏற்ப அமைய வேண்டும் என தெரியப்படுத்தினோம். எங்கள் கருத்துகளை கேட்டுக்கொண்டார்கள்; பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. புதுச்சேரியிலும் போட்டியிட வேண்டுமென கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவிடம் பேசவில்லை எண்ணிக்கை […]
சென்னை, நந்தம்பாக்கத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். நிதிநுட்ப நகரத்தில் 249 கோடி ரூபாய் செலவில் அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள நிதிநுட்ப கோபுரத்தை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்,. விழாவில் அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டுக்கான என்னுடைய கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டுமல்ல; ஓட்டுமொத்த தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகளை உள்ளடைக்கியதுதான் எனது கனவு. நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து […]
கோவில்பட்டி அருகே மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பாலகணேஷ் மேச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் ஒரு பகுதியில் குச்சி குடோன் உள்ளது. இன்று காலை ஆலையில் வழக்கம் போல் வேலை நடந்து கொண்டு இருந்தது. காலை 8 மணி அளவில் ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட குச்சி மூட்டைகளை குடோனில் இறக்கி வைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர், அப்போது எதிரபாராதவிதமாக தீக்குச்சிகள் உரசிக்கொண்டதில் குடோனில் இருந்த குச்சி மூட்டைகளில் […]
குருவாயூர்-சென்னை எழும்பூர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- * கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டு உள்ளது. ] * […]
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை யொட்டி 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு திருச்சி மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர், இவர்களில் 117 பேர் பெண் வேட்பாளர்கள் கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக வக்கீல் பாண்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வருகின்ற புதன் கிழமை 4.3.2026 அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் வக்கீல் பாண்டி அறிமுக கூட்டம் மற்றும் சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது , கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள […]







