தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கிக்கான தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியை சார்ந்த 60 மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி கல்லூரி நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு தேர்வுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிககள் வெற்றி பெற கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கோவில்பட்டி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. வங்கி தேர்வு […]
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை […]
காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அந்த பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 9-11-2024 அன்று பாலுசெட்டி சத்திரம் பைபாஸ் அருகே உறவினர்கள் 4 பேருடன் சென்னை செல்வதற்காக ஆரணியில் இருந்து சென்னை சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ் கண்டக்டர் அவரிடம் பாலுசெட்டி சத்திரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு டிக்கெட் கொடுக்காமல் ஆரணியில் இருந்து சென்னை செல்வதற்கான கட்டணத்தை அதாவது தலா ரூ.90 வீதம் […]
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட் டம் திருச்சியில் மாநில துணைத்தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் தலைவர் பழனி பாரதி சிறப்புரையாற்றினார்.அவர் கூறியதாவது:- டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக 24 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு இன்றி குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம். தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதன் விளைவாக, எங்களது பிரதான கோரிக்கைகள் குறித்து அமைச்சர் மற்றும் உள்துறை […]
மாநிலங்களவை தேர்தல்; நிதிஷ்குமார் வேட்புமனு தாக்கல்; முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுகிறார்
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் பீகார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் விலக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பீகாரில், சட்டசபை செயலாளர் கியாதி சிங் அலுவலகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில், நிதிஷ்குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் தங்களுடைய வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது, துணை […]
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 சட்டசபை தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களிலும், 2016 தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. கடந்த (2021) சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் […]
தமிழ்நாட்டில் 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது,. இதன் ஒரு பகுதியாக, இன்று (5.3.2026) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள T.D.T.A. P.S. பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு மாணாவர்கள் அமைதியான முறையில் தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வல்லநாடு வி.றி.வி.டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாணவர்கள் […]
தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் கோவில்பட்டி என். ராஜவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் ஆக்கிரமிப்பினால் தீப்பெட்டி விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த தீப்பெட்டி தொழில் 103 வருடம் பாரம்பரியமிக்கது. இதில் நேரடியாகவும் , மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். தற்பொழுது சிவகாசி தீப்பெட்டி தொழில் முன்னோடிகள் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் ஆலை தொடங்குவதால் தீப்பெட்டி உற்பத்தி மற்றும் […]
கோவில்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் டி. டி. டி. ஏ.உயர்நிலைப் பள்ளியின் தாளாளராக கோவில்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ( பணி நிறைவு ) அ. ராஜபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சி. எஸ். ஐ.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளரும் , திருமண்டல மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளருமான எஸ். டி. கே. ராஜன் மற்றும் திருமண்டல மூத்த செயற்குழு உறுப்பினர் – ஆடிட்டர் ஜெபச்சந்திரன் ஆகியோர் இந்த நியமனத்தை செய்து உள்ளனர். இதை தொடர்ந்து நாகலாபுரம் உயர்நிலைப் பள்ளி தாளாளராக அ.. […]
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ந்தேதி சனிபெயர்ச்சி ஆகிறது. அந்த வகையில் சனிபகவான் கும்பம் ராசியிலிருந்து 6.3.2026 வெள்ளிக்கிழமை காலை 8.26 மணிக்கு வெளியேறி மீனம் ராசியில் பிரவேசிக்கிறார். இதையொட்டி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலை 7:25 மணிக்கு நவகிரங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து அலங்காரங்கம், காலை 8.26 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். சனிபகவான் விடுதலைபெறும் ராசிகள்: – ரிஷபம், மிதுனம், துலாம், கடகம், […]







