விளாத்திகுளம் அருகே கடந்த மார்ச் 10-ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பிளஸ்-2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் முட்புதரில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குற்றவாளியைக் கைது செய்யும் வரை உடலைப் பெறப்போவதில்லை எனப் பெற்றோர்களும் கிராம மக்களும் தெரிவித்தனர். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் தர்ம முனீஸ்வரன் என்ற முக்கியக் குற்றவாளியைத் தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று கைது […]
தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் வீட்டில் கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இந்த முறை சட்டசபை தேர்தலில் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் தி.மு.க. வட்டாரத்தில் பரவியது. […]
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:- நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் […]
கோவில்பட்டியில் ‘இலக்கியச் சாரல்’ மற்றும் ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ கல்வி நிறுவனம் சார்பில், ராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய ‘தேடல்’ புத்தகத்தின் திறனாய்வு நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் ப. ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ‘ஞான ஒளிமலர்’ இந்திராணி மற்றும் எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி […]
கோவில்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை காட்டுப்பாட்டில் உள்ள செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவில் சுற்றுப் பகுதி முழுவதும் ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது கோவில் சுற்றுப் பகுதியில் சமூக வலைத்தளங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கோவில் முன்பு காலணிகளை கழற்ற அனுமதி கிடையாது. காலணியை […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்துள்ளார். இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் மதன் கூறியதாவது :- குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 4 டி.எஸ்.பி-க்கள், 6 ஆய்வாளர்கள் உட்பட 150 […]
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கடந்த 11-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கக் காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் […]
கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 118 மற்றும் 115 சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாமின் நான்காவது நாளான “சாலை பாதுகாப்பு தினத்தை” முன்னிட்டு விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி மந்திதோப்பு கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் இ.ஜெய்சிங்கராஜ் வரவேற்று பேசினார். கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கே. மலையாண்டி தலைமையில் தீயணைப்பு வண்டியுடன் கலந்து கொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு […]
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மார்ச் 19 வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தை 5 வெவ்வேறு தலைநகரங்களாகப் பிரித்துச் செயல்படுத்தப் போவதாகச் சீமான் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு :- 1. திருச்சி – முதன்மை நிர்வாகத் தலைநகரம்: தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி, மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாக மாற்றப்படும். […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த 10ஆம் தேதி மாலை இயற்கை உபாதைக்காக தனது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடினர். இதனையடுத்து மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததது 11ஆம் தேதி காலை தெரியவந்தது. இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி […]







