• March 19, 2026

கல்லூரி மாணவ, மாணவியருக்கான விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை

 கல்லூரி மாணவ, மாணவியருக்கான விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை

Oplus_16908288

கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 118 மற்றும் 115  சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாமின் நான்காவது நாளான “சாலை பாதுகாப்பு தினத்தை” முன்னிட்டு விபத்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை நிகழ்ச்சி மந்திதோப்பு கிராமத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் இ.ஜெய்சிங்கராஜ் வரவேற்று பேசினார்.

 கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கே. மலையாண்டி  தலைமையில் தீயணைப்பு வண்டியுடன் கலந்து கொண்டு, தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை என். எஸ். எஸ். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடைமுறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

டி.அருள்ஜோதி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய வேண்டும், மேலும் அவசர காலங்களில் தீயணைப்புத் துறையை எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக விளக்கினார்.

தீயணைப்பு காவலர்கள் கே. சரவணசெல்வன், எம்.கண்ணன், எஸ். மாரியப்பன் மற்றும் எம். மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும், கல்லூரி பேராசிரியர்கள் செல்லத்துரை, கோகிலா,  திவ்யா,  மகாலட்சுமி வெற்றிச்செல்வி ஆகியோரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர். இறுதியில், மாணவியர் திட்ட அலுவலர் எஸ். சுசீலா அவர்கள் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *